August 16, 2024

மூலிகைக் கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும் நெடுந்தீவில் இடம்பெற்றது

நெடுவூர் மூவிழா – 2024 இனை முன்னிட்டு உணர்வும் உறவும் அமைப்பானது 05.08.2024 தொடக்கம் 10.08.2024 வரை வடமாகாண சுதேச மருத்தவத்திணைக்களத்துடன் இணைந்து மூலிகைக் கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வினை நெடுந்தீவில் நடாத்தினர். இக்கண்காட்சியில் மூலிகைகள், சிறுதானியவகைகள், பாரம்பரிய ஆரோக்கிய உணவுகள் காட்சிப்படுத்தல்களுடன் அவற்றிற்குரிய விளக்கங்களும் வழங்கப்பட்டன.  மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், இயற்கை மூலிகைப்பாணங்கள், இலைக்கஞ்சி, நீரிழிவு முகாமைத்துவம், சூரிய நமஸ்காரம் போன்ற விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.  மாகாண சுதேசமருத்துவத் திணைக்களத்தின் கீழ் கடமையாற்றும் […]

மூலிகைக் கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும் நெடுந்தீவில் இடம்பெற்றது Read More »

சர்வதேச ஆயுள்வேதக் கண்காட்சியும் ஆய்வு மாநாடும் 2024

2024 ம் ஆண்டுக்கரிய சர்வதேச ஆயுள்வேதக் கண்காட்சியும் ஆய்வுமாநாடும் கடந்த 09.08.2024 தொடக்கம் 11.08.2024 ம் திகதிவரை மூன்று நாட்கள் தென்மாகாணம் காலிமாவட்டத்தின் மாநகரசபை வளாகத்தில் நடைபெற்றது. இதில் வடமாகாண சுதேச மருத்துவத்திணைக்களம் கண்காட்சிக்கூடம் ஒன்றினை ஏற்படுத்தியிருந்தது. இதில் பிரதி மாகாண ஆணையாளர் இவைத்தியர்கள் பங்குபற்றியிருந்தனர். இக்கண்காட்சியில் வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மருந்து உற்பத்திப் பிரிவினரால் தயாரிக்கப்பட்ட மருந்துகள் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் வெளியீடுகள் மற்றும் ஆரோக்கிய சிற்றுண்டிகள், கோப்பிவகைகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனையும் இடம்பெற்றது.  

சர்வதேச ஆயுள்வேதக் கண்காட்சியும் ஆய்வு மாநாடும் 2024 Read More »