வீரமணி ஐயரின் ஆக்கங்கள் (தொகுதி-1)” நூல் வெளியீட்டு விழா -2021

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் ,ளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பதிப்பிக்கப்பட்ட “வீரமணி ஐயரின் ஆக்கங்கள்(தொகுதி-1)” நூல் வெளியீட்டு விழா கல்வி அமைச்சின் மண்டபத்தில் 13 டிசெம்பர் 2021 அன்று பி.ப 3.00 மணிக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி. சுஜீவா சிவதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விவசாய அமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.
வீரமணிஐயரின் துணைவியார் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், அவரை பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வரவேற்று கௌரவித்திருந்தது. இவர்களுடன் வாழ்நாள் பேராசிரியர்.பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்களும், பேராசிரியர் அ.சண்முதாஸ், முனைவர் மனோன்மணி சண்முதாஸ் அவர்களும், கலந்து சிறப்பித்தார்கள். செஞ்சொற்செல்வர் திரு.ஆறு திருமுருகன் அவர்களும் கலந்ததுடன், இந்நிகழ்விற்கு வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர்கள், நடனத்துறை விரிவுரையார்கள், ஆசிரியர்கள், கலைஞர்களும் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.
பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதிப் பணிப்பாளரின் தலைமையுரையுடன் நிகழ்வு ஆரம்பமானது. ,ந்நூலுக்கான வெளியீட்டுரையை கவிஞர் சோ.பத்மநாதன் அவர்களும், (ஓய்வுநிலை அதிபர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி) அறிமுகவுரையை கலாநிதி கிருஷாந்தி ரவீந்திரா அவர்களும்,(நிர்வாக இயக்குநர் “நாட்டியக்கலாகேந்திரா” உடுவில்) மற்றும் திரு.தி.செல்வமனோகரன் அவர்களும், (விரிவுரையாளர் ,ந்துக்கற்கைகள் பீடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) வழங்கினார்கள். திரு.சு.ஸ்ரீகுமரன் (உதவிக் கல்விப்பணிப்பாளர்) அவர்களின் நன்றியுரையுடன் இனிதே இந் நிகழ்வானது முடிவுற்றது.