வவுனியாவில் நடமாடும் சித்த மருத்துவ முகாம் இடம்பெற்றது

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து வவுனியா மாவட்டத்தில் ஸ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தில் இலவச மருத்துவ முகாமினை கடந்த 29.07.2023ந் திகதி 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை நடாத்தியிருந்தது.

இந்நிகழ்வில் கௌரவ இந்தியத் துணைத்தூதுவர், வடமாகாண சுகாதார அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர், வடமாகாண சுதேச மருத்துவ ஆணையாளர், வடமாகாண சுதேச மருத்துவ பிரதி ஆணையாளர், வவுனியா பிரதேச செயலாளர், வவுனியா மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பாளர், பாடசாலை அதிபர் மற்றும் கிராம சேவையாளர், அபிவிருத்தி மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் பங்குபற்றி நிகழ்வை சிறப்பித்ததுடன் ஏறத்தாழ 175 பொதுமக்கள் மருத்துவ சேவையைப் பெற்று பயனடைந்தனர்.