வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் இலவச மருத்துவ முகாமினை கடந்த 19.12.2021 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடாத்தியது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தின் அரசாங்க அதிபர், இந்தியத்துணைத்தூதுவர், வடக்குமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர், பிரதி ஆணையாளர், கரைச்சி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட ஆயர்வேத ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், பாரதிபுரம் மகாவித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், கிராமமுன்னேற்ற கழகங்கள் மற்றும் மருத்துவ, சமூகமருத்துவ உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம்மருத்துவ முகாம் மூலம் 230 பயனாளிகள் பயன்பட்டனர்.