வடக்கு மாகாணத்தில் புதிய ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் நியமனம்

வடக்கு மாகாணத்திற்கென நியமிக்கப்பட்ட புதிய ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு 07 நவம்பர் 2025 அன்று யாழ்ப்பாணம், பண்ணை, சுகாதார கிராமத்தில் அமைந்துள்ள மாகாண சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நியமனக் கடிதங்களை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.  இதன்போது யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர், மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.