பின் தங்கிய பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கான தேவைகள் தொடர்பான களவிஜயம் – பிரதேச வைத்தியசாலை, நெடுந்தீவு

பின் தங்கிய பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களுக்கான மருத்துவ சேவையினையும் வைத்தியசாலையின் தேவைகளையும் கண்டறிந்து கொள்ளும் நோக்குடன், வடமாகாண சுகாதார அமைச்சும், மாகாண சுகாதார பணிப்பாளர் பணிமனையும் இணைந்து பின் தங்கிய பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு, அவற்றின் தேவைகள் பற்றிய கலந்துரையாடலொன்று 09 யூலை 2019 நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்றது.

இதில் அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், கணக்காளர், திட்டமிடல் வைத்திய அதிகாரி, உயிரியல் மருத்துவ பொறியியலாளர், பிராந்திய மருந்தாளர், தொழிநுட்ப உத்தியோகத்தர், மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு, வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.