பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் அடிக்கல் நாட்டும் வைபவம் 

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் அடிக்கல் நாட்டும் வைபவமானது 16.08.2019 ஆம் திகதி நடைபெற்றது. இக்கட்டடமானது நெதர்லாந்து அரசின் இலகு கடன் உதவியினால் உருவாக்கப்படவுள்ளது.

சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். அத்தோடு இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் பசத்தியலிங்கம் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நெதர்லாந்து செயற்திட்ட பணிப்பாளர்கள், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய அதிகாரிகள், தாதியர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.