பண்டதரிப்பு கிராமிய சித்த வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக கட்டடத்தின் திறப்பு விழா

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் பண்டதரிப்பு கிராமிய சித்த வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக கட்டடத்தின் திறப்பு விழாவானது கடந்த 14.08.2023 ந் திகதியன்று நடைபெற்றது. மதியம் 12.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் புதிய கட்டடமானது வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி. எஸ். மோகநாதன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர், பிரதி ஆணையாளர், பண்டத்தரிப்பு – சென்மேரிஸ் தேவாலயத்தின் பங்கு தந்தை அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் ஆசியுரையானது பண்டத்தரிப்பு – சென்மேரிஸ் தேவாலயத்தின் பங்கு தந்தை அவர்களினாலும் தலைமையுரை மாகாண ஆணையாளர் அவர்களினாலும் வழங்கப்பட்டதுடன் விருந்தினர் உரையானது சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சு வடக்கு மாகாண செயலாளர் அவர்களினால் வழங்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் , பண்டத்தரிப்பு பொது சுகாதார பரிசோதகர், சண்டிலிப்பாய் உதவி பிரதேச செயலர், பண்டத்தரிப்பு பிரதேச சபை வட்டார உறுப்பினர் , பண்டதரிப்பு கிராமிய சித்த வைத்தியசாலை மருத்துவப் பொறுப்பதிகாரி, உத்தியோகத்தர்கள், சுதேச மருத்துவ திணைக்கள வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், அயல் பாடசாலை அதிபர்கள் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர், மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்குபற்றி இந் நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.