சுகாதார அமைச்சின் 2020 ஆம் ஆண்டுக்கான துறைசார் மீளாய்வுக் கூட்டம்

2020ம் ஆண்டிடுக்கான சுகாதாரம், சுதேச மருத்துவம் மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களங்களின் துறைசார் கூட்டமானது மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மாநாட்டு மண்டபத்தில் 15.09.2020 அன்று  நடைபெற்றது.

வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. பா.செந்தில்நந்தனன் அவர்களின் தலைமையில் கீழ் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாணஆணையாளர் – சுதேச மருத்துவ திணைக்களம், மாகாணஆணையாளர் மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம், அனைத்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் வைத்திய அத்தியட்சர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள் நிர்வாக உத்தியோகத்தர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த துறைசார் கூட்டத்தில் 2020 இற்கான செயற்பாடுகள், ஆளணி நிலைமைகள், இவ்வாண்டில் செய்யவேண்டிய வேலைத்திட்டங்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.