சித்த விசேட சிகிச்சைப்பிரிவு மற்றும் மருந்துகள் விற்பனை நிலையம் திறப்பு விழா

 

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தால் சித்த விசேட சிகிச்சைப்பிரிவு மற்றும் மருந்துகள் விற்பனை நிலையமானது கடந்த 28.10.2022 அன்று அச்சுவேலியில் திறந்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் உருவாக்கப்பட்ட சித்த விசேட சிகிச்சைப்பிரிவு மற்றும் மருந்துகள் விற்பனை நிலையமானது வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. ளு.ஆ. சமன் பந்துலசேன அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடக்குமாகாண பிரதம செயலாளர்;;; வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர்; வடக்கு மாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர்; அதிபர், சான்றுபெற்ற பாடசாலை – அச்சுவேலி; வடக்கு மாகாண சுதேச மருத்துவத்திணைக்களத்தின் ஆணையாளர்; மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள்; மருத்துவப் பொறுப்பதிகாரி சித்த போதான வைத்தியசாலை – கைதடி மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்கள்.

இந்நிகழ்வில் மருத்துவ அத்தியட்சகர் அவர்களினால் வரவேற்புரை வழங்கப்பட்டதை தொடர்ந்து பிரதம செயலாளர் அவர்களின் உரை இடம்பெற்றது. அத்துடன் கட்டணப்பிரிவின் உருவாக்கம் தொடர்பான காட்சிபடுத்தல் இடம்பெற்று நன்றியுரையுடன் இந்நிகழ்வு நிறைவுபெற்றது.