தொண்டைமானாற்றில் மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்திற்கு திருமதி.ஜெயதேவி நாகேந்திரன் அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட 120 பேர்ச்சஸ் காணியில் PSDG நிதியின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட சித்த மத்திய மருந்தகம் வடக்கு மாகாண கொளரவ ஆளுனர் அவர்களால் 09.07.2024 அன்று உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
மாகாண சுதேசமருத்துவ திணைக்கள ஆணையாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாண சுகாதார சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர்பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், சுதேச மருத்தவ திணைக்கள பிரதி ஆணையாளர், மேற்பார்வை சமூகமருத்துவ உத்தியோகத்தர், கிளிநொச்சி ஆதார வைத்திய சாலையின் மருத்துவ அத்தியட்சகர், பருத்தித்துறை சித்த மத்திய மருந்தக மருத்துவ பொறுப்பதிகாரி மற்றும் மருத்துவ உத்தியோகத்தர்கள், சுதேச மருத்துவ திணைக்கள கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், திணைக்கள மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பருத்தித்துறை பிரதேச செயலாளர் இவல்வெட்டித்துறை பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி, அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், செல்வச் சந்நிதி ஆலய சமயப் பெரியார்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரதேச மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனா.
நிகழ்வில் விருந்தினர் உரையைத் தொடர்ந்து நிகழ்வின் நிறைவாக மருத்துவ குணமுடைய மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.