2024ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர்தினமானது வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் 14.03.2024 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுவில் சித்த மத்திய மருந்தகத்தில் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மகளிரின் ஆரோக்கியத்தில் உணவின் முக்கியத்துவம் தொடர்பாக சிறுதானியங்கள், பாரம்பரிய உணவுகள், இயற்கைப்பானங்கள் மற்றும் மூலிகைக் கன்றுகள் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வுகள் சமூக மருத்துவ உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டன. அத்துடன் சுதேச மருத்துவத் திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற பெண் வைத்தியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற முன்பள்ளி ஆசிரியை ஆகியோர் கௌரவிக்கப்பட்டு அவர்களிற்கு மரக்கன்று மற்றும் பாரம்பரிய உணவு செய்முறை அடங்கிய இறுவட்டும் வழங்கப்பட்டதோடு ஏனைய விருந்தினர்களுக்கு மூலிகைக் கன்றுகளும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர்;, மேற்பார்வை சமூக மருத்துவ உத்தியோகத்தர், சமூக மருத்துவ உத்தியோகத்தர்கள், ஓய்வுபெற்ற ஆயுர்வேத வைத்தியர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், அரச அலுவலர்கள், மகளிர் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.