கௌரவ ஆளுநர் அவர்கள் கல்மடு மூலிகைக் கிராமத்திற்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 19 யூலை 2025 அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள கல்மடு மூலிகை கிராமத்திற்கு மேற்பார்வை விஜயம் ஒன்றை மேற்கொண்டு பார்வையிட்டார்.

இதன்போது மூலிகைக் கிராமத்தின் தற்போதைய நிலைமை பற்றி கிளிநொச்சி மாவட்ட மருத்துவ அத்தியட்சகர், மருத்துவப் பொறுப்பதிகாரி மற்றும் பணியாளர்கள் ஆகியோரை சந்தித்துக் கேட்டறிந்து கொண்டதுடன் அதன் எதிர்கால அபிவிருத்தி சம்பந்தமாகவும் கலந்துரையாடினார்.