நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தினை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜெயராணி பரமோதயன் ஆகியோர் இன்று (06.06.2025) நேரில் சென்று பார்வையிட்டனர்.
இவ்விஜயத்தின் போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.