ஆயுர்வேத விழிப்புணர்வுக் கண்காட்சி

இந்திய ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய ஆயுர்வேத நாளை முன்னிட்டு வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம், இந்திய துணைத்தூதரகம் மற்றும் சித்த போதனா வைத்தியசாலை – கைதடி ஆகியவை இணைந்து சுதேச மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வுக் கண்காட்சி ஒன்றானது கடந்த 21.10.2022 மற்றும் 22.10.2022 ஆகிய தினங்களில் கைதடி சித்த போதனா வைத்தியசாலையில் நடாத்தப்பட்டது.
இக்கண்காட்சியில் மருந்து உற்பத்தி பிரிவினால் உற்பத்தி செய்யப்பட்ட மருந்து மற்றும் மூலிகைகள் என்பன காட்சிப்படுத்தப்பட்டதுடன் பராம்பரிய சத்துணவுகள் தொடர்பான செய்முறை விளக்கங்களும் யோகாசனம், தியானம் போன்ற செய்முறை விளக்கங்களும் வழங்கப்பட்டன.
இக்கண்காட்சியில் இந்திய உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர், பேரவைச் செயலகத்தின் பேரவைத்தலைவர், மேயர், மாநகரசபை – யாழ்ப்பாணம், சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண ஆணையாளர், கைதடி சித்த போதன வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி, ஏனைய வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்குபற்றினர்.
இக்கண்காட்சியில் ஏறத்தாள 1000 பயனாளிகள் பயனடைந்தனர்.