ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட சிற்றூர்தியின் வழித்தட பயணிகள் சேவை அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்

ஆபத்தான பயணத்தை மேற்கொண்டமைக்கான காணொளி ஆதாரங்களுடன் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களினூடாகவும் வெளிவந்த செய்தி மற்றும் கௌரவ ஆளுநருடைய ஊடகப்பிரிவும் சுட்டிக்காட்டிய விடயம் தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் திரு.க.மகேஸ்வரன் அவர்களால் அறியத்தரப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பயணிகள் சேவைக்காக யாழ்ப்பாணம் – பருத்தித்துறைக்கு 750 வழித்தட பயணிகள் சேவை அனுமதிப்பத்திரத்தினைக் கொண்ட 29 சிறி 7911 இலக்க சிற்றூர்த்தியின் உரிமையாளரின் வழித்தட பயணிகள் சேவை அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் சாரதி, நடத்துநர் மற்றும் சிற்றூர்தி உரிமையாளர் மேலதிக நடவடிக்கைக்காக உரிய ஆவணங்களுடன் அதிரகாரசபைக்கு சமூகமளிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த துரித நடவடிக்கை, பாதுகாப்புத் தரங்களைப் பராமரிப்பதற்கும், பயணிக்கும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணுவதற்கும் அதிகாரிகள் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.