அமரர் சுப்பையா இராமலிங்கம் ஞாபகார்த்த சித்த வைத்தியசாலை கையளிப்பு

உடுவில் பிரதேச செயலர் பிரிவு தாவடி தெற்கில் அமரர் சுப்பையா இராமலிங்கம் ஞாபகார்த்த சித்த வைத்தியசாலையானது திருமதி. ஆனந்தவல்லி குடும்பத்தினர் மற்றும் இராமலிங்கம் குடும்பத்தினரால் நிர்மாணிக்கப்பட்டு சுதேச மருத்துவ திணைக்களத்திற்க்கு நன்கொடையாக வழங்கும் நிகழ்வானது கடந்த 28.06.2023 ஆம் திகதியன்று இடம்பெற்றது.

இந் நிகழ்வானது காலை 10.00 மணியளவில் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகி நினைவுக்கல் மற்றும் அமரர் சுப்பையா இராமலிங்கம்; அவர்களின் சிலை திரை நீக்கம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி. எஸ். மோகநாதன் (செயலாளர், செயலாளர், சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சு வடமாகாணம்), சிறப்பு விருந்தினராக டாக்டர். திருமதி. க. ஜெபநாமகணேசன் (மாகாண ஆணையாளர், சுதேச மருத்துவ திணைக்களம், வடமாகாணம்) அவர்களும் மற்றும் கௌரவ விருந்தினராக திருமதி. கோகிலா மகேந்திரன் (ஓய்வு பெற்ற பிரதிக்கல்வி பணிப்பாளர்) அவர்களும் கலந்து சிறப்பித்து ஆசியுரை வழங்கியிருந்தார்கள். மேலும் சுதேச மருத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து இந் நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.