விருது வழங்கும் நிகழ்வு

2020ம் ஆண்டிற்கான தேசிய உற்பத்திதிறன் விருதானது மாவட்ட சித்த வைத்தியசாலை – முல்லைத்தீவிற்கு கிடைப்பதற்கு பங்களிப்புச் செய்த வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களிற்கான பாராட்டு சான்றிதழ்களும் COVID – 19 பெருந்தொற்றுக் காலத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களிற்கான பாராட்டு சான்றிதழ்களும் கடந்த 03.01.2023 அன்று முல்லைத்தீவு மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் நடாத்தப்பட்ட வருட நிறைவு விழாவில் வழங்கி கௌரவிக்கப்பட்து.

இந்நிகழ்வில் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர், முன்னாள் பிரதி மாகாண ஆணையாளர் மற்றும் மன்னார் மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பு மருத்துவ உத்தியோகத்தர் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டதுடன், முல்லைத்தீவு மாவட்ட சித்த வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு மருத்துவ உத்தியோகத்தர், முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.