வடமாகாண சுகாதார அமைச்சுக்கு பாராளுமன்ற அரச கணக்கு நிதிக் கோட்பாடுகள் வினைத்திறன்மிக்கதாக செயற்பட்டமைக்கான தங்கப்பதக்கம்

பாராளுமன்ற அரச கணக்கு குழுவினால் 2017ம் ஆண்டுக்காக நடாத்தப்பட்ட அரச அலுவலகங்கள், நிதிக் கோட்பாடுகளுக்கு இணங்குதலுக்கான மதிப்பீட்டு செயற்பாட்டில் வினைத்திறனாக செயற்பட்டமைக்காக வடமாகாணத்தின் சுகாதார அமைச்சுக்கு தங்க விருது வழங்கப்பட்டது.

இன் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கடந்த 05.07.2019; திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் வடமாகாணத்தின் சுகாதார அமைச்சுக்குகான விருது பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஜெயசூரிய அவர்களினால் வடமாகாணத்தின் சுகாதார அமைச்சின் செயலாளர் திரு சி. திருவாகரன் அவர்களிடம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.