வடக்கு மாகாண சுகாதார சேவையின் பரிசாரகர தரம்-III க்கான பதவியுயர்வு மீதான நியமனக் கடிதங்கள் கையளித்தல் நிகழ்வு

Best Online Slots (2023) - Top Slot Machines to Play

வடமாகாண சுகாதார அமைச்சினால் சுகாதார சேவை பரிசாரகர் தரம் – iii க்கான பதவியுயர்வுக்கான நியமன கடிதங்கள் 22.05.2019 அன்று சுகாதார திணைக்களத்தின் மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டன.

சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.சி.திருவாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் 99 பணியாளர்கள் தமக்கான பதவியுயர்வு மீதான நியமன கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். அத்தோடு வளவாளர்களாக பயிற்சி வழங்கிய அலுவலர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கலாநிதி. சுரேன் ராகவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நியமன கடிதங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. ஆ.கேதீஸ்வரன் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், வைத்திய அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.