வடக்கு மாகாண சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி கொழும்பு ஆசிரி மருத்துவமனையில் நடைபெற்றது

வடக்கு மாகாண சுகாதார ஊழியர்களுக்கு சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சி நெறி கொழும்பு ஆசிரி மத்திய மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று நிறைவடைந்தது. இப் பயிற்சி திட்டங்கள் மருத்துவ மற்றும் மருத்துவரல்லாத ஊழியர்களுக்காக இரண்டு பிரிவுகளாக ஏற்பாடு செய்யப்பட்டன, மேலும் இப் பயிற்சியில்  மருத்துவ நிர்வாகிகள், மருத்துவ அதிகாரிகள், மருத்துவமனை கணக்காளர்கள், திட்டமிடல் அதிகாரி, தாதிய பரிபாலகர், விடுதி சகோதரிகள், உணவு மேற்பார்வையாளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சியின் நிறைவு அமர்வு செப்டம்பர் 09, 2020 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆசிரி மத்திய மருத்துவமனையின் மருத்துவ பணிப்பாளர், செயற்பாட்டு பணிப்பாளர், வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், திரு பி.செந்தில்நந்தன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர். திரு அ.கேதீஸ்வரன் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர் மற்றும் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சுகாதார அமைச்சு மற்றும் வடக்கு மாகாண மாகாண சுகாதாரத் திணைக்களம் சார்பில் ஆசிரி இயக்குநருக்கு ஒரு நினைவு சின்னம் ஒன்றை வழங்கினார்.