மல்லாவி தள வைத்தியசாலையில் சிறுநீரக நோய் சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மல்லாவி தள வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுநீரக நோய் சிகிச்சை நிலைய கட்டடம் 08.06.2019 திகதியன்று சனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அவர்களால் முல்லைத்தீவு பொதுவிளையாட்டரங்கிலிருந்து இலத்திரனியல் முறைமூலமாக திறந்து வைக்கப்பட்டது.

அனைவருக்கும் நலன் பெற்று ஆரோக்கியம் மிக்க மக்கள் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் குறித்த நிலையம் நிர்மாணிக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு, துணுக்காய் பிரதேசசபை தவிசாளர், முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி சு.சத்தியரூபன், மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.