போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடொன்றிற்கான “சித்திரை புதுவருட உறுதியுரை”

அதிமேதகு சனாதிபதி அவர்களின் நிலைபேறான அபிவிருத்தி எண்ணக்கருவின் கீழ் அவரது நேரடி கண்காணிப்பு மற்றும் நெறிப்படுத்தலுடன் செயற்படுத்தப்படுகின்ற “போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடு” போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கமைவாக கடந்த 03.04.2019ஆம் திகதி காலை 8.30 மணிக்கு வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தில் ‘சித்திரை புதுவருட உறுதியுரை’ எடுக்கப்பட்டதுடன் போதை விடுதலை தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்றும் நடாத்தப்பட்டது.