வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட பயனாளிகளுடனான வீட்டுத்திட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடல் நிகழ்வு

நிதி, திட்டமிடல் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 2022 ஆம் ஆண்டிற்கான குறித்தொதுக்கப்பட்ட விசேட அபிவிருத்தி நன்கொடை (PSDG) நிதியில் வடக்கு மாகாணத்தில் 25 வீட்டுத்திட்டங்களுக்காக, வருமானம் குறைந்த மற்றும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

15 மார்ச் 2022 அன்று வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட, முறையே 04,02,02 வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான, அறிமுக மற்றும் திட்ட நடைமுறைகள் தொடர்பாக, அமைச்சின் செயலாளர் அவர்களின் தலைமையில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் – வவுனியா அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றதுடன் அமைச்சிற்கும் பயனாளிகளுடனான ஒப்பந்தமும் கைச்சாத்தப்பட்டது.