“நொண்டி நாடகம்” நூல் வெளியீட்டு விழா -2021

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பதிப்பிக்கப்பட்ட “நொண்டி நாடகம்” நூல் வெளியீட்டு விழா கல்வி அமைச்சின் மண்டபத்தில் 29.11.2021 ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி. சுஜீவா சிவதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
கிராமியக் கலைகளின் அடிநாதங்களாகத் திகழும் கூத்துக்களின் ஒரு அங்கமாகவே இந் நூலானது வெளியிடப்பட்டுள்ளது.
பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதிப் பணிப்பாளரின் தலைமையுரையுடன் நிகழ்வு ஆரம்பமானது. இந்நூலுக்கான பதிப்பாசிரியராக திரு. ஜோன்சன் ராஜ்குமார், ஆசிரிய ஆலோசகர் கடமையாற்றினார். நொண்டி நாடகப் பாடலும் நிகழ்வில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களும் கலந்துகொண்டனர்.