வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் “ஞானசவுந்தரி நாடகம்”, “சந்தோமையார் வாசகப்பு”, “மன்னார் மாதோட்டப் புலவலர்கள் – கலைஞர்கள்” ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா மன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரியில் 2021.12.16 ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மேதகு கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார். முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு. ஏ.யூட்குரூஸ் அவர்களும், நானாட்டான் பங்குத் தந்தை அருட்திரு. எல். சுரேந்திரன் றெவல் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கலந்து நிகழ்வை சிறப்பித்தார்.
பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதிப் பணிப்பாளரின் தலைமையுரைடன் நிகழ்வு ஆரம்பமானது. நூல்களுக்கான வெளியீட்டுரையை வண.பிதா தமிழ்நேசன் அடிகளார் அவர்களும், அறிமுகவுரையை ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.எஸ்.டேவிற் அவர்களும்; நிகழ்த்தினார்கள். ஞானசவுந்தரி நாடகத்தின் பாடல்கள் கலைஞர்களால் இசைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கூத்து, நாடகக் கலைஞர்கள் கலந்து சிறப்பித்தனர்.