நடமாடும் வைத்திய சேவை – அச்சுவேலி

மாவட்ட சித்த வைத்தியசாலை – யாழ்ப்பாணத்தினால் நடமாடும் வைத்திய சேவையானது அச்சுவேலி சான்று பெற்ற பாடசாலையில் 18 ம் திகதி யூலை 2022 ஆரம்பிக்கப்பட்டது. மாவட்ட சித்த வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களினால் நடாத்தப்பட்ட இவ் நடமாடும் வைத்திய சேவையில் யூலை மாத இறுதி வரை 128 நோயளர்கள் வருகை தந்து பயனடைந்தனர்.

நடமாடும் வைத்திய சேவையானது யூலை மாத இறுதி வரையும் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நடாத்தப்பட்டு வந்து தற்போது ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகின்றது. ஒகஸ்ட் மாத 4வது வாரம் வரை 536 நோயளர்கள் வருகை தந்துள்ளனர்.