நடமாடும் மருத்துவ சேவை – குருநகர்

தெல்லிப்பளை கிராமிய சித்த வைத்தியசாலையினால் நடமாடும் மருத்துவ சேவையானது குருநகர் தொடர்மாடி சனசமூக நிலையத்தில்; கடந்த 04/01/2023 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந் நடமாடும் மருத்துவ சேவையானது யாழ்ப்பாணப் பிரதேசத்திலுள்ள மக்கள் பயன்பெறும் வகையில் வாரந்தோறும் நடைபெறத் திட்டமிப்பட்டுள்ளது. இச்சேவை வழங்குவதற்குரிய கட்டட வசதியானது குருநகர் ஐக்கிய முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்டு தரப்பட்டுள்ளது.

இவ் ஆரம்ப நிகழ்வில் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர், யாழ் மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், மருத்துவ உத்தியோகத்தர்கள், அருட்ச்சகோதர்களான அருளானந்தம் ஜவின் மற்றும் டிலான், குருநகர் ஐக்கிய முன்னணி அமைப்பின் தலைவர், செயலாளர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்குபற்றி நிகழ்வை சிறப்பித்தத்துடன் ஏறத்தாழ 20 பொதுமக்கள் மருத்துவ சேவையைப் பெற்று பயனடைந்தனர்.