நடமாடும் மருத்துவ சேவை – கரியாலை நாகபடுவான்

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் நடமாடும் மருத்துவ சேவையானது கடந்த 07.12.2022 அன்று 19ம் கட்டை, கரியாலை நாகபடுவான், கிளிநொச்சியில் ஆரம்பிக்கபட்டது. கரியாலை நாகபடுவான் அறம் செய் அறக்கட்டளை நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்நடமாடும் சேவையானது இவ்விடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டது.

இந் நடமாடும் மருத்துவ சேவையின் மூலம் ஏறத்தாழ 85 நோயாளர்கள் மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனையைப் பெற்று நன்மை அடைந்ததுடன் பூநகரி பிரதேச செயலக சமூக மருத்துவ உத்தியோகத்தர், பிரதேசசபை உறுப்பினர்கள், அறம் செய் அறக்கட்டளை நிலைய உறுப்பினர்கள், விவசாய அமைப்புக்கள், வணிகசங்கங்கள், மகளிர் அமைப்புக்கள், ஏனைய சமூகமட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.