சுகாதார அமைச்சின் 72 வது தேசிய சுதந்திரதின விழா வைபவம்

Paddy Power Slots You Have to Play - #5 Has Surprising Votes

வடமாகாண சுகாதார அமைச்சின் “ பாதுகாப்பான தேசம் – செழிப்பான நாடு” என்னும் தொனிப்பொருளை முன்னிலைப்படுத்தி இலங்கையின் 72 வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் 04.02.2020 அன்று காலை 8.00 மணியளவில் அமைச்சின் முன்றலில் நடைபெற்றது.

இன்நிகழ்வின் போது சுதந்திரதினத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைச்சின் சிரேஸ்ட உதவிச்செயலாளர் திரு.செ.பிரணவநாதன் அவர்கள் உரையாற்றினார். அதனை தொடந்து அலுவலக சூழலை துப்பரவு செய்யும் சிரமதானப்பணியும் மரநடுகை நிகழ்வுகளும் நடைபெற்றது.

இன்நிகழ்வில் அமைச்சின் பிரதம கணக்காளர் உத்தியோகத்தர்கள், மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.