சித்த மருந்து விற்பனை நிலையம் திறப்பு – கிளிநொச்சி

சித்த மருந்துகள் கிளிநொச்சி மாவட்ட மக்களிற்கும் தனியார் வைத்தியர்களிற்கும் கிடைக்கக்கூடிய விதத்தில் சேவையை விஸ்தரிக்கும் வகையில் சித்த மருந்து விற்பனை நிலையமானது கடந்த 04/01/2023 அன்று கிளிநொச்சி மாவட்ட சித்த வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிலையமானது கிளிநொச்சி மாவட்ட செயலாளர் அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர், கிளிநொச்சி மாவட்ட சித்த வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர், யாழ்ப்பாண மாவட்ட சித்த வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சித்த வைத்தியசாலை மருத்துவ உத்தியோகத்தர்களும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.