தொண்டைமானாற்றில் மாகாண சுதேச மருத்துவத்திணைக்களத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் புதிதாக கட்டப்பட்ட சித்தமத்திய மருந்தகத்தின் பால்காய்ச்சும் ஆரம்ப நிகழ்வு மாகாண சுதேசமருத்துவ திணைக்கள ஆணையாளர் தலைமையில் 10.04.2024 ம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாகாண சுதேச மருத்துவ திணைக்கள பிரதி ஆணையாளர் இகணக்காளர்இ திணைக்கள உத்தியோகத்தர்கள், உரியகாணியின் நன்கொடையாளர், செல்வச்சந்நிதி ஆலய சமயப்பெரியார்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் இபிரதேச மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இப்புதிய கட்டடமானது பருத்தித்துறை பிரதேச செயலக மக்களிற்கு சுதேச மருத்துவத்துறையூடாக சுகாதார சேவைகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.