கங்கண சூரிய கிரகணம் அவதானிக்கும் நிகழ்வு

2019.12.26ம் திகதி காலை 07:00 மணி முதல் யா/கட்டைக்காடு றோ.க.த.க. பாடசாலையில் கங்கண சூரிய கிரகணம் அவதானிக்கும் நிகழ்வு கொ/நாலந்தா கல்லூரியின் வானியல் சங்கத்தின் ஒத்துழைப்புடன் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் 200 பாடசாலை மாணவர்கள் உட்பட வடமாகாண கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்கள், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர்கள், கொ/நாலந்தா கல்லூரியின் வானியல் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் இராணுவத்தினர் மற்றும் பிரதேச பொதுமக்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் பயன்பெற்றனர்.