இலவச சித்த மருத்துவ முகாம் மன்னாரில் இடம்பெற்றது

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முருங்கன் டொன் பொஸ்கோ ரெக் மண்டபத்தில் இலவச மருத்துவ முகாமினை கடந்த 20.03.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணிவரை நடாத்தியது.

இந்நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர், வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், டொன் பொஸ்கோ இயக்குனர், சமூக மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இம்மருத்துவ முகாம் மூலம் 190 பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.