அச்சுவேலி மருந்து உற்பத்திப்பிரிவில் அகஸ்திய முனிவர் சிலை நிறுவப்பட்டது

Ways to Play Free Poker Online in 2023

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் மருந்து உற்பத்திப்பிரிவு – அச்சுவேலியில் கடந்த 24.05.2023 அன்று அகஸ்திய முனிவருடைய சிலையானது புதிதாக நிறுவப்பட்.டது.

அகஸ்திய முனிவருடைய சிலையானது மருந்து உற்பத்திப்பிரிவின் இயந்திர இயக்குனரினால் அன்பளிப்பு செய்யப்பட்டு மருந்து உற்பத்திப்பிரிவு வளாகத்தின் முற்புறப் பகுதியில் நிறுவப்பட்டது.

இந்நிகழ்வில் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர், மருந்து உற்பத்திப் பிரிவின் மருத்துவ பொறுப்பதிகாரி, யாழ் மாவட்ட சித்த வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர், நவக்கிரி மூலிகைத்தோட்டத்தின் மருத்துவப் பொறுப்பதிகாரி, மருத்துவ உத்தியோகத்தர்கள், திணைக்கள கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.