உள்ளூராட்சித் திணைக்களம்
ஆணையாளர்
திருமதி.தேவந்தினி பாபு
ஆணையாளர்
உள்ளூராட்சித் திணைக்களம்
முதியோர் இல்லக் கட்டடத் தொகுதி,
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்.
தொ.பே: 021-2215728
கை.தொ.பே: 0779565222
தொ.ந: 021-2215738
மின்னஞ்சல்: npcadre@gmail.com
பணிநோக்கு
வடமாகாண சபையின் ஐனநாயக முறைகளைப் பரவலாக்கி உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஆற்றலினை வலுப்படுத்தி மிகப் பரந்த அளவில் வாழும் பிரஜைகளுக்கு மிக இலகுவாக பொதுச் சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்தல்.
குறிக்கோள்கள்
- வினைத்திறனுடனும், விளைதிறனுடனும் கூடிய உள்ளூராட்சி முறைகளைகள் செயல்படுவதை உறுதிப்படுத்தல்.
- புனர்நிர்மாணம், அபிவிருத்தி வேலைகள் நிறைவேற்றுவதற்கு தேவையான உதவிகளையும், வழிகாட்டல்களையும் வழங்குதல்.
- முகாமைத்துவ தகவல் முறைமை உருவாக்குதலும், பேணுதலும்.
- அறிவு, நுட்பம் ஆற்றல்களை விருத்தி செய்வதனுடாக மனிதவள அபிவிருத்தியை உறுதிப்படுத்தல்.
- சூழல், சுற்றாடல் சுகாதாரத் திட்டம் போன்றவற்றினை உள்ளூராட்சி மன்றங்கள் நிறைவேற்றுவதற்கு வேண்டிய தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குதல்.
- வினைத்திறன் மற்றும் விளைதிறனுடனும் கூடிய பொது, நிதி, நிர்வாகத்தை உறுதிப்படுத்தல்.
பிரதான விடயப்பரப்புக்கள்
கொள்கை, அதிகாரம், உருவாக்கம் போன்றவை பற்றிய உள்ளூராட்சித் திணைக்களத்தின் செயற்பாடுகளுடன் தொடர்புடைய விடயங்களை மாகாண சபையுடனும், மத்திய அமைச்சுடனுமான தொடர்புகளைப் பேணுதல்.
சட்டரீதியான, நிர்வாக ரீதியான மற்றும் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளைக் கண்காணித்தலும் செயற்படுத்தலுமாகும்.
நிர்வாக குறைபாடுகள் சம்பந்தமாக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
கொள்கை ரீதியிலான உள்ளூராட்சி மன்றங்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குதல்.
நிதி மற்றும் வர்த்தக ரீதியிலான நடவடிக்கைகளுக்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதம செயலாளரதும், அமைச்சினதும் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தலும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குதலுமாகும்.
உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் சம்பந்தப்பட்ட சட்டங்கள், துணைச்சட்ட நடவடிக்கையின் போது ஏனைய சேவைகள் வழங்கும் திணைக்களங்களுடன் தொடர்புகளை சிறந்த முறையில் பேணுதல்.
உள்ளக கணக்காய்வுப் பிரிவினை நகரசபைகளில் உருவாக்கி அதனைக் கண்காணிப்பதற்கு வேண்டிய உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்குதல்.
புனர்நிர்மான வேலைகள், அபிவிருத்தி வேலைகள் மற்றும் நான்காண்டுத் திட்டங்கள் தயார் செய்வதற்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு உதவியாகவும் வழிகாட்டியாகவும் செயல்படுதல்
முகாமைத்துவ தகவல் முறைமையை அபிவிருத்தி செய்வதற்கு உதவுதல்.
பொருத்தமான விடயங்கள் சம்பந்தமாக சமூக தலைவர்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களுக்கு தலைவர்களுக்கும் ஊழியர்களுக்கும், தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களுக்கும் பயிற்சிக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புத் திட்டங்களை நிறைவேற்றத் தேவையான தொழில்நுட்ப ஆலோசகைள் என்பவற்றை வழங்கல்;
பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேவையான நன்கொடைகள், சம்பள மீளளிப்பு போன்றவை சரியான முறையிலே பயன்படுத்தப்படுவதை முறையான கணக்கு வைக்கும் முறைகளை பரிசீலனைகள் செய்வதனுடாக உதவிகளையும் வழிகாட்டல்களையும் வழங்குதல்.
நீர் வழங்கல், சுற்றாடல் பாதுகாப்புத் திட்டம் மற்றும் போன்ற சேவைகளை அடையாளம் காண்பதும், திட்டமிடுதலும், அமூல்செய்தலும் உள்ளூராட்சி மன்றங்களுடனும், சமூக தலைவர்களுடனும் இணைந்து செயலாற்றுதல்
தொடர்புகளுக்கு
முகவாி: முதியோா் இல்லக்கட்டடத் தொகுதி, கைதடி, யாழ்ப்பாணம்
தொலைபேசி இல.: 021-221 3728, 021-221 5738
தொலைநகல் இல. : 021-221 5738
மின்னஞ்சல்: nplocalplan@gmail.com
பதவி | பெயா் | நேரடி இல. | கை.தொ.இல. | மின்னஞ்சல் |
உள்ளுராட்சி ஆணையாளா் | திருமதி.தேவந்தினி பாபு | 021-2215728 | 0779565222 | npcadre@gmail.com |
உள்ளுராட்சி உதவி ஆணையாளா் | திரு.ப.பார்த்திபன் | 021-2215728 | 0779542355 | npcadre@gmail.com |
பொறியியலாளா் | திரு.சி.பரணீதரன் | 021-2050236 | 0772334245 | nplocalplan@gmail.com |
கணக்காளா் | திரு.பே.பிறேமச்சந்திரன் | 021-2050238 | 0770273456 | clgacctnp@gmail.com |
நிா்வாக உத்தியோகத்தா் | திரு.பி.நாவலன் | 021-2050237 | 077-9415260 | npcadre@gmail.com |