கிளிநொச்சி சித்த மத்திய மருந்தக புதிய கட்டடத் திறப்பு விழா

கிளிநொச்சி சித்த மத்திய மருந்தகத்திற்குரிய புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வு 2025 யூலை 11ம் திகதி அன்று சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுதேச மருத்தவத் திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி தி. சர்வானந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

புதிய கட்டடத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மேலும், கௌரவ விருந்தினர்களாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ப. ஜெயராணி மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திரு சு. முரளிதரன் ஆகியோரும் பங்கேற்றனர்.

இந் நிகழ்வில் திணைக்கள உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இப்புதிய கட்டடம் PSDG இன் கீழ் ரூ. 56 மில்லியன் நிதியில் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.