தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சி நெறி

கண்டாவளை பிரதேச செயலக சிறு தொழில் முயற்சிப்பிரிவு உத்தியோகத்தரினால் மூலிகைக் கிராமம் கல்மடுநகரில் கடந்த 21.09.2023 ந் திகதியன்று காலை 9.00 மணியளவில் தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சி நெறி ஒழுங்கமைக்கப்பட்டது.

இவ் தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சி நெறியானது வளவாளரான திரு.ச.நிரோசன் அவர்களினால் வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட பயிற்சி நெறியில் தேன் மற்றும் தேனீக்கள் மூலம் கிடைக்கும் நன்மைகள், தேனீக்கள் கூட்டத்தில் உள்ள தேனீக்கள் பற்றிய அறிமுகம் அவற்றின் வாழ்க்கை வட்டம், தேனீ வளர்ப்பின் போது கவனத்தில் கொள்ளவேண்டிய காரணிகள் மற்றும் அவசியப்படும் உபகரணங்கள் தொடர்பாகவும் பயிற்சி நெறி அளிக்கப்பட்டது.

மேலும் தேனீ பரம்பல் அதிகமாக உள்ள பெரியகுளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தேனீக்களை பிடிக்கும் முறை செயன்முறை வடிவில் பயிற்சி நெறி அளிக்கப்பட்டது.

இப் பயிற்சி நெறியில் கல்மடுநகரின் கிராமிய சித்த வைத்தியசாலையின் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 30 பேர் பங்குபற்றியிருந்ததுடன் தேனீ வளர்ப்பு தொடர்பான  விளக்கத்தினை பெற்று பயனடைந்திருந்தனர்.