வீட்டுத்திட்டங்களின் பௌதீக முன்னேற்ற நிலை – 2022

நிதி, திட்டமிடல் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 2022 ஆம் ஆண்டிற்கான குறித்தொதுக்கப்பட்ட விசேட அபிவிருத்தி நன்கொடை (PSDG) நிதியில் வடக்கு மாகாணத்தில் 25 வீட்டுத்திட்டங்களுக்காக, பெண் தலைமைதாங்கும், வருமானம் குறைந்த அதிக குடும்ப அங்கத்தவர்கள், கடந்த யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்கள், அங்கவீன தீராத நோயாளிகளினை கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளால், திட்டம் பௌதீக ரீதியாக ஆரம்பிக்கப்பட்டு, அத்திபார கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றது. முன்னர் திட்டமிட்டமைக்கு அமைவாக, இம்மாத இறுதிக்குள் அனைத்து பயனாளிகளினாலும் அத்திபார கட்டுமானங்கள் நிறைவு செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.