வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் கலை மற்றும் இலக்கியத் துறைக்கு பங்களிப்பு செய்து தற்போது வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு உதவுத் தொகை வழங்கல் நிகழ்வு

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் உள்ள கலைஞர்களுக்கு உதவுதொகை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் 06 ஒக்டோபர் 2020 அன்று கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார். ஆளுநரின் செயலாளர் திருமதி.ச.மோகநாதன் அவர்களும், வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் மற்றும் முனைவர் திருமதி. மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார். விருந்தினர்களின் சிறப்புரையைத் தொடர்ந்து வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 230 கலைஞர்களில் 75 பேருக்கு உதவுதொகையாக தலா 5000/= க்குரிய காசோலை வழங்கப்பட்டது. வருகை தந்திருந்த கலைஞர்களில் சிலர் தமக்கு வழங்கப்பட்ட உதவித்தொகைக்கு நன்றி தெரிவித்ததுடன், அவர்கள் தமது கலை ஆக்கங்களையும் வழங்கினர். யாழ்ப்பாண மாவட்ட சிரேஷட கலாசார உத்தியோகத்தர் திரு.மா.அருள்சந்திரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர்களும், திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.