இலங்கைக்கான எகிப்து தூதரகத்தால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட Women Plus Bazaar 2024 கண்காட்சியின் கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள One Galle Face சிறப்பு அங்காடி தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்காட்சி கூடத்தை, ஏனைய அதிதிகளுடன் இணைந்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திறந்து வைத்தார். பின்னர் கண்காட்சி கூடத்தையும் பார்வையிட்டார்.
நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்களின் உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் பெண் தொழில் முனைவோரை இலக்காகக் கொண்டு இந்த கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.