முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் ஒட்டுசுட்டானில் எமது மாவட்டத்தில் போசணைமிக்க உணவு உட்கொள்வதை பழக்கப்படுத்தும் நோக்கில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் நிதி அனுசரணையுடன் மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.சு.செந்தில்குமரன் அவர்களின் ஆலோசனைக்கமைவாக ONE DISH MEAL எனும் தொனிப்பொருளில் எமது மாவட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்களிற்கு 11.06.2024 அன்று பாடவிதான உத்தியோகத்தர் கேமா கமலதீபன் அவர்களால் சிறப்பாக செய்முறை பயிற்சியும் வழங்கப்பட்டு காட்சிப்படுத்தலும் மேற்கொள்ளப்ப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாணவிவசாயப் பணிப்பாளர் யாமினி சசீலன், காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்ட உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்,மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய உத்தியோகத்தர்கள், NVQ-4 பயிலுனர்கள், விவசாயிகள் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில் இவ் செய்முறை பயிற்சியினையும் காட்சிப்படுத்தலையும் ஒவ்வொரு விவசாயப் போதனாசிரியர்கள் பிரிவிலும் உள்ள முன்பள்ளிகள், ஆரம்ப பாடசாலைச் சிறார்களின் போசணை மட்டத்தை அதிகரிப்பதற்காகவும் மற்றும் போசணைக்குறைபாடுகள் காணப்படும் இடங்களை அவதானித்து விவசாயிகளிற்கும், பெண்கள் அமைப்புகளிற்கும் நடாத்தப்படவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இப்பயிற்சியானது இலகுவாக கிடைக்கக் கூடிய உள்ளுர் மரக்கறிகள் தானியங்கள் முட்டை என்பனவற்றை பயன்படுத்தி போசணைகள் நிறைந்த ஏழு வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டிருந்தது. இவ் உணவுகளை அன்றைய மதிய உணவாக அனைவருக்கும் பரிமாறப்பட்டது. உத்தியோகத்தர்கள் விவசாயிகள் ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில் சுவையானதாகவும் ஊட்டச்சத்து கூடியதாகவும் இலகுவாக 45 நி மிடங்களில் தயாரிக்கக் கூடியதாகவும் காணப்பட்டதென தெரிவித்திருந்தனர்.
7 முறை
முறை- 01
- சமைத்த நாட்டு அரிசி சாதம் 1 ½ கிலோ (12 கப்).
- தோல் உரித்து மற்றும் சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட கரட் 225 கிராம் (2 ½ கப்).
- தோல் உரித்து மற்றும் சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பூசிணிக் காய் 225 கிராம் (2 ½ கப்) தோல்.
- உரித்து மற்றும் சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட கருணைக் கிழங்கு 225 கிராம் ( 2 ½ கப்).
- சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பசளிக்கீரை 225 கிராம் ( 2 ½ கப்).
- தேங்காய் எண்ணெய் 75 கிராம் (5 மேசைக் கரண்டிகள்).
- தூள் உப்பு 10 கிராம் (2 மேசைக் கரண்டிகள்).
- மிளகுத் தூள் 10 கிராம் ( 2 மேசைக் கரண்டிகள்).
- அரைத்த உள்ளி 25 கிராம் ( 1 மேசைக் கரண்டி).
- புதிய அரைத்த இஞ்சி 25 கிராம் ( 1 மேசைக் கரண்டி).
- சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட கருவேப்பிலை 25 கிராம் ( 1 மேசைக் கரண்டி).
- பெரிய வெங்காயம் 100 கிராம் (10 மேசைக் கரண்டிகள் /1 கப்).
- நன்றாகக் அடித்துக் கலக்கப்பட்ட முட்டை 2.
முறை- 02
- சமைத்த நாட்டு அரிசி சாதம் 1 ½ கிலோ (12 கப்).
- தோல் உரித்து மற்றும் சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட கரட் 225 கிராம் (2 ½ கப்).
- சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பயற்றங்காய் 225 கிராம் (2 ½ கப்).
- சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட சாம்பல் வாழைக்காய் 225 கிராம் ( 2 ½ கப்).
- சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பசளிக்கீரை 225 கிராம் ( 2 ½ கப்).
- தேங்காய் எண்ணெய் 75 கிராம் (5 மேசைக் கரண்டிகள்).
- தூள் உப்பு 10 கிராம் (2 மேசைக் கரண்டிகள்).
- மிளகுத் தூள் 10 கிராம் (2 மேசைக் கரண்டிகள்).
- அரைத்த உள்ளி 25 கிராம் ( 1 மேசைக் கரண்டி).
- புதிய அரைத்த இஞ்சி 25 கிராம் ( 1 மேசைக் கரண்டி).
- சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட கருவேப்பிலை 25 கிராம் ( 1 மேசைக் கரண்டி).
- பெரிய வெங்காயம் 100 கிராம் (10 மேசைக் கரண்டிகள் / 1 கப்).
- நன்றாகக் அடித்துக் கலக்கப்பட்ட முட்டை 2.
முறை- 03
- சமைத்த நாட்டு அரிசி சாதம் 1 ½ கிலோ (12 கப்).
- தோல் உரித்து மற்றும் சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பீற்றூட் 225 கிராம் (2 ½ கப்).
- சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட சாம்பல் வாழை 225 கிராம் (2 ½ கப்).
- சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட கருணைக் கிழங்கு 225 கிராம் (2 ½ கப்).
- சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பசளிக்கீரை 225 கிராம் (2 ½ கப்).
- தேங்காய் எண்ணெய் 75 கிராம் (5 மேசைக் கரண்டிகள்).
- தூள் உப்பு 10 கிராம் (2 மேசைக் கரண்டிகள்).
- மிளகுத் தூள் 10 கிராம் (2 மேசைக் கரண்டிகள்).
- அரைத்த உள்ளி 25 கிராம் ( 1 மேசைக் கரண்டி).
- புதிய அரைத்த இஞ்சி 25 கிராம் ( 1 மேசைக் கரண்டி).
- சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட கருவேப்பிலை 25 கிராம் ( 1 மேசைக் கரண்டி).
- பெரிய வெங்காயம் 100 கிராம் (10 மேசைக் கரண்டிகள் / 1 கப்).
- நன்றாகக் அடித்துக் கலக்கப்பட்ட முட்டை 2.
முறை- 04
- சமைத்த நாட்டு அரிசி சாதம் 1 ½ கிலோ (12 கப்).
- தோல் உரித்து மற்றும் சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட கரட் 225 கிராம் (2 ½ கப்).
- அவித்த கொண்டக்கடலை 225 கிராம் ( 1 ½ கப்).
- தோல் உரித்து மற்றும் சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட கருணைக் கிழங்கு 22கிராம் ( 2 ½ கப்).
- சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட லீக்ஸ் 225 கிராம் ( 2 ½ கப்).
- தேங்காய் எண்ணெய் 75 கிராம் (5 மேசைக் கரண்டிகள்).
- தூள் உப்பு 10 கிராம் (2 மேசைக் கரண்டிகள்).
- மிளகுத் தூள் 10 கிராம் (2 மேசைக் கரண்டிகள்).
- அரைத்த உள்ளி 25 கிராம் ( 1 மேசைக் கரண்டி).
- புதிய அரைத்த இஞ்சி 25 கிராம் ( 1 மேசைக் கரண்டி).
- சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட கருவேப்பிலை 25 கிராம் ( 1 மேசைக் கரண்டி).
- பெரிய வெங்காயம் 100 கிராம் (10 மேசைக் கரண்டிகள் / 1 கப்).
- நன்றாகக் அடித்துக் கலக்கப்பட்ட முட்டை 2.
முறை – 05
- சமைத்த நாட்டு அரிசி சாதம் 1 ½ கிலோ (12 கப்).
- தோல் உரித்து மற்றும் சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட கரட் 225 கிராம் (2 ½ கப்).
- சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பயிற்றங்காய் 225 கிராம் (2 ½ கப்).
- சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட லீக்ஸ் 225 கிராம் (2 ½ கப்).
- முருக்கம் இலை 225 கிராம் (2 ½ கப்).
- தேங்காய் எண்ணெய் 75 கிராம் (5 மேசைக் கரண்டிகள்).
- தூள் உப்பு 10 கிராம் (2 மேசைக் கரண்டிகள்).
- மிளகுத் தூள் 10 கிராம் (2 மேசைக் கரண்டிகள்).
- அரைத்த உள்ளி 25 கிராம் ( 1 மேசைக் கரண்டி).
- புதிய அரைத்த இஞ்சி 25 கிராம் ( 1 மேசைக் கரண்டி).
- சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட கருவேப்பிலை 25 கிராம் ( 1 மேசைக் கரண்டி).
- பெரிய வெங்காயம் 100 கிராம் (10 மேசைக் கரண்டிகள் / 1 கப்).
- நன்றாகக் அடித்துக் கலக்கப்பட்ட முட்டை 2.
முறை- 06
- சமைத்த நாட்டு அரிசி சாதம் 1 ½ கிலோ (12 கப்).
- தோல் உரித்து மற்றும் சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட கரட் 225 கிராம் (2 ½ கப்).
- தோல் உரித்து மற்றும் சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட வத்தாளங்கிழங்கு 225 கிராம் (2 ½ கப்)அவித்த பயறு 225 கிராம் (1 ½ கப்).
- சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட கோவா இலை 225 கிராம் (2 ½ கப்).
- தேங்காய் எண்ணெய் 75 கிராம் (5 மேசைக் கரண்டிகள்).
- தூள் உப்பு 10 கிராம் (2 மேசைக் கரண்டிகள்).
- மிளகுத் தூள் 10 கிராம் (2 மேசைக் கரண்டிகள்).
- அரைத்த உள்ளி 25 கிராம் ( 1 மேசைக் கரண்டி).
- புதிய அரைத்த இஞ்சி 25 கிராம் ( 1 மேசைக் கரண்டி).
- சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட கருவேப்பிலை 25 கிராம் ( 1 மேசைக் கரண்டி).
- பெரிய வெங்காயம் 100 கிராம் (10 மேசைக் கரண்டிகள் / 1 கப்).
- நன்றாகக் அடித்துக் கலக்கப்பட்ட முட்டை 2.
முறை- 07
- சமைத்த நாட்டு அரிசி சாதம் 1 ½ கிலோ (12 கப்).
- தோல் உரித்து மற்றும் சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பூசிணி காய் 225 கிராம் (2 ½ கப்).
- சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட சிறகவரை 225 கிராம் (2 ½ கப்).
- தோல் உரித்து மற்றும் சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட கருணைக் கிழங்கு 225 கிராம் (2 ½ கப்).