நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வடக்கு மாகாணத்திற்கு 4 பொறியியலாளர்களும், 39 தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் நியமனம்
மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களும், நிதி ஆணைக்குழுவும் அடுத்த ஆண்டு மாகாணசபைகளுக்கு மத்திய அமைச்சுக்களின் நிதிகளை நேரடியாக வழங்குவது தொடர்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர். எனவே அடுத்த ஆண்டு வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அபிவிருத்திக்கு மிகப்பெரிய பாய்ச்சல் மிக்க ஆண்டாகவே அமையப்போகின்றது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கை பொறியியல்சேவை மற்றும் இணைந்த சேவையின் தொழில்நுட்பவியல் சேவை பதவிக்கான நியமனம் வழங்கல் நிகழ்வு கைதடியிலுள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை […]
