2021ம் ஆண்டுக்கான வடமாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து திணைக்களங்களினதும் பணிகளின் ஆரம்ப நிகழ்வானது ஆளுநர் செயலகத்தில் கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று (04.01.2021) காலை 10 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், துறைசார்ந்த அமைச்சின் செயலாளர்கள், இந்திய தூதரக அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், காவற்துறை அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிபர்கள் ஆளுநர் செயலக உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கௌரவ ஆளுநர் அவர்கள் மங்கள விளக்கேற்றி பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறிய விருந்துபசாரத்திலும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.