2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்04 மார்ச் 2021 அன்று காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலாளர் திருமதி . அ. ஸ்ரான்லி டி மெல் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது
இக் கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநரும் , மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான கௌரவ திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் அவர்கள் கலந்துகொண்டார் . மேலும் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ காதர் மஸ்தான் , கௌரவ செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கௌரவ கு. திலீபன் போன்றவர்களும் , பிரதமசெயலாளர், ஆளுநரின் செயலாளர் , ஆளுநரின் இணைப்புச்செயலாளர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் , முப்படை அதிகாரிகள் மற்றும் அனைத்து துறைசார் அதிகாரிகளும் ,க் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
முதலாவதாக இக் கலந்துரையாடலில் புதிதாக பிரிக்க உத்தேசித்துள்ள மாந்தை வடக்கு பிரதேச செயலகத்தின் விபரங்கள் கையளிக்கப்பட்டு ஆராயப்பட்டன. இதன் போது கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் ,தற்கான முன்மொழிவினை முறையாக தயாரித்து மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதி பெற்று எல்லை நிர்ணய ஆணைக்குழு கூடிய பிறகு அதற்கான அனுமதிக்கு சமர்ப்பிக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
மேலும் கல்வி , நீர் வழங்கல் , அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழு சார்ந்து இவ் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கான அனுமதிக்காக குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. அடுத்ததாக கடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களான , தோட்டவெளிப்பகுதியின் மண் அகழ்வு தொடர்பாக கலந்துரையாடப்பட்டபோது கருத்துத் தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் புவியியல் ஆய்வு சுரங்கப் பணியகம் அதிகாரிகளுக்கு மண் அகழ்வுக்காக தெரிவுசெய்யப்படும் இடங்களையும் அதற்கான ஆவணங்களையும் மாவட்ட செயலாளர் , பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவர்களுக்கும் அறிவிக்கும் படியும் மற்றும் மாவட்ட செயலாளரின் தலைமையிலான குழுவிற்கு சமர்ப்பிக்காமல் எதுவித அனுமதியும் மண் அகழ்விற்கு வழங்கவேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்
அடுத்ததாக மன்னார் மாவட்டத்தின் கோவிட்-19 தொடர்பான தற்போதைய நிலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும் மேய்ச்சல் தரைகள் தொடர்பான விடயங்கள் , மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடப்படவேண்டிய கடற்தொழில் வளத்துறை , சுகாதாரத்துறை , வீதி அபிவிருத்தி திணைக்களம் , கூட்டுறவு திணைக்களம் , பனை அபிவிருத்தி சபை , பிரதேச செயலகம் மாந்தை மேற்கு பிரதேசசெயலகம் பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகம் , மற்றும் காணி தொடர்பான பிரச்சினைகள் என்பன கலந்தாலோசிக்கப்பட்டது.