151 பாடசாலைகளுக்கு ஆளுநர் தலைமையில் 2 கோடி ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

அனைத்து வளங்களும் நிறைந்த வடமாகாணம் இலங்கையின் ஏனைய மாகாணங்களுக்கும் மானியம் கொடுக்கக்கூடிய மாகாணமாக ஒரு நாள் மாறவேண்டும் என்பதே என் கனவு. அந்த கனவையே நான் இங்கு விதையாக விட்டுச்செல்ல விரும்புகின்றேன் என்று ஆளுநர் சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார்.

வடமாகாணத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட  பாடசாலைகளுக்கு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழையமாணவர்களினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கௌரவ ஆளுநர் அவர்கள் தலைமையில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் 28 பெப்பிரவரி 2019 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு  ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வடமாகாணத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட 151 பாடசாலைகளுக்கு யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்களின் சிட்னி கிளையுடன் ஏனைய கிளைகளும் இணைந்து 2 கோடி ரூபா பெறுமதியான  விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளன.

இந்த நிகழ்வில் ஆளுநர் அவர்கள் சம்பிருதாயபூர்வமாக ஐந்து பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.