வேணாவில் கிராமிய சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டம்  வேணாவில் கிராமிய சுகாதார நிலையம் ஜனாதிபதியின் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” வேலைத்திட்டத்தின் ஊடாக 07.06.2019 திகதி திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி உமாசங்கர், புதுகுடியிருப்பு பிரதேசசெயலர் ம.பிரதீபன், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி கெங்காதீஸ்வரன், வைத்திய கலாநிதி சு.சத்தியரூபன், பொது சுகாதார உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.