வெளிநாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் கைத்தறி நெசவு நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்

வெளிநாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் சிறுப்பிட்டியில் அமைந்துள்ள வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் கைத்தறி நெசவுப் பயிற்சி நிலையத்திற்கு 18 டிசெம்பர் 2022 அன்று விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது நெசவாளர்களுடன் தற்போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகக் கலந்துரையாடியதுடன் நெசவாளர்களின் தயாரிப்புகளில் காணப்படும் அவர்களின் முயற்சியையும் பாராட்டினர். மேலும் நெசவுத் தயாரிப்புகளை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதன்போது மொத்த விற்பனையானது ரூபாய் 67,000.00 ஆகக் காணப்பட்டது.