விவசாய-வானிலைஆலோசனைப் பகிர்வுசேவையின் வினைத்திறன் தொடர்பாக ஆராய்வதற்கான கலந்துரையாடல்

மாகாணவிவசாயத் திணைக்களத்தின் வுவுனியா மாவட்டத்தின் அலுவலர்களிற்கும் “PALM” நிறுவனத்தின் அலுவலர்களுக்குமிடையில் விவசாய-வானிலை ஆலோசனைப் பகிர்வு சேவையின் முன்னேற்றம் தொடர்பாகவும் களநிலை அலுவலர்களிடமிருந்து அதுதொடர்பான பின்னூட்டல்களைப் பெறுவதற்காகவும் 14.08.2020 ஆம் திகதி வவுனியா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இவ் விவசாய-வானிலைஆலோசனை சேவையானது எதிர்பாக்கப்படும் வானிலை நிலைமைகளுக்கேற்ப விவசாயிகள் தமது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை திட்டமிட்டுக் கொள்ளவதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ் ஆலோசனைத் தகவலானது பேராதனை விவசாயத் திணைக்களத்தின் இயற்கை வளங்கள் முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்படுகின்ற அச்சிடப்பட்ட ஆவணங்களினூடாகவும், கூட்டங்களினூடாகவும் மற்றும் கைபேசி வலையமைப்பினூடாகவும் விவசாயிகளுக்கு பகிரப்பட்டு வருகின்றது. இக் காலப்பகுதி சிறுபோகம் நிறைவடையும் காலப்பகுதியாக இருப்பதனால் இவ் ஒன்றுகூடல் ஒழுங்குசெய்யப்பட்டு மேற்படி தகவல் பரிமாற்ற அமைப்பின் வினைத்திறன், தகவல் விவசாயிகள் மத்தியில் எவ்வளது தூரம் பரப்பப்படுகின்றது, அதனை விவசாயிகள் பயன்படுத்தும் தன்மை மற்றும் எதிர்காலத்தில் புதிதாக கைக்கொள்ளப்பட வேண்டிய அல்லது மாற்றப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.