விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கு இலங்கைக்கான சிறந்த விவசாய நடைமுறைகள் (SL –Good Agricultural Practice)

Reasons Why You Should Play Live Casino Games at Royal Panda

விவசாய உற்பத்தியின் போது சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் சமூகவியல் பேண்தகு தன்மையினை பாதுகாக்கும் விதத்தில் ஆரோக்கியமானதும் உயர் தரமானதுமான உணவு உற்பத்திக்காக மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் சிறந்த விவசாய நடைமுறைகள் எனப்படும் (FAO,2003)

ஆரோக்கியமானதும் தரமானதுமான உணவுகளுக்கு உலகில் அதிக கேள்வி நிலவுகின்றது. நுகர்வோரின் கேள்விகளுக்கு ஏற்ப தரமான ஆரோக்கியமான உணவுகளை உற்பத்தி செய்வது சகல விவசாயிகளினதும் கடமையாகும். இன்று சந்தையில் காணப்படும் விவசாய உற்பத்திகளை நுகர்வதற்கு பாவனையாளர்கள் தயக்கம் காட்டுவதை காண முடிகின்றது. எனவே விவசாயிகளினால் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் உற்பத்திகளின் தரம் மற்றும் ஆரோக்கியத்தை நுகர்வோருக்கு உறுதி செய்யும் வகையில் பண்ணை உற்பத்திகளை அத்தாட்சிப்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தல் அவசியமாகும். எனவே விவசாயத்திணைக்களத்தினால் 2015இல் முதன் முதலாக இலங்கைக்கான சிறந்த விவசாய நடைமுறைகள் (SL-GAP) அறிமுகப்படுத்தப்பட்டது.

இலங்கையினுள் சிறந்த விவசாய நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான இலங்கைக்கான சிறந்த விவசாய நடைமுறைகள் தொடர்பான பிரமாணங்களானது விவசாயத்திணைக்களம் மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவனம் என்பனவற்றினால் ஒன்றிணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நியமங்களின் பிரகாரம் சிறந்த விவசாய நடைமுறைகள் செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தல் மற்றும் SL-GAP சான்றிதழினை வழங்குதல் ஆகியன விவசாயத்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தேசிய தேவையாகிய இச்செயற்றிட்டத்தினை விரிவுபடுத்துவதற்காக மாகாண விவசாயத் திணைக்களங்கள், மாகாண இடைக்கடமை பிரதேசங்கள் மற்றும் மஹாவலி அதிகாரசபையின் நிறுவனங்களை ஒன்றிணைத்து இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இச்செயற்றிட்டத்தின் மூலம் விவசாய உணவுப்பயிர்களின் தரம் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் அதற்காக இலங்கையின் சிறந்த விவசாய நடைமுறைகளுக்கான (SL-GAP)சான்றிதழும் விவசாயத் திணைக்களத்தால் வழங்கப்படுகின்றது.

SL-GAP அத்தாட்சிப்படுத்தல்

குறித்த விவசாய உற்பத்திப்பொருளானது விதை அல்லது நடுகைப்பொருளிலிருந்து இறுதி உற்பத்திப்பொருள் வரையிலான சகல நடவடிக்கைகளும் சிறந்த விவசாய
நடைமுறைகளின் நியமங்களுக்கு அமைவாகவும் உற்பத்திப்பொருளின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் தரத்தினை பேணும் விதத்தில் தொடர்ச்சியாக
மேற்கொள்ளப்படுகின்றது என்பதனை உறுதிப்படுத்தி வழங்கப்படும் சான்றிதழ் ஒன்றாகும்.

இச்சான்றிதழானது சுயாதீனமான குழுவொன்றினால் சிபாரிசு செய்யப்பட்டு விவசாயபணிப்பாளர் நாயகத்தின் கீழுள்ள விதை அத்தாட்சிப்படுத்தல் தாவர பாதுகாப்பு
சேவையின் சிறந்த விவசாய நடைமுறைகளை அத்தாட்சிப்படுத்தல் அலகு மூலம் வழங்கப்படும்.

சிறந்த விவசாய நடைமுறைகளை பயன்படுத்துவதன் முக்கியத்துவம்

 

1. விவசாய உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்களிற்கு

• சர்வதேச சந்தைகள் மற்றும் சிறப்பங்காடிகளுக்கு தரமான உற்பத்திகளை விநியோகிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
• பயிர்ச்செய்கையின் போது ஏற்படும் உற்பத்தி செலவினை குறைத்துக்கொள்வதன் மூலம் கூடிய வருமானம் பெறப்படும்
• தரமான விளைச்சலினை பெற்றுக்கொள்வதன் மூலம் உற்பத்திகளுக்கு உயர் விலை பெறப்படுவதுடன் உற்பத்திகள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பமும் குறைவு
• பண்ணையிலிருந்து பாதுகாப்பான உற்பத்திப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படும்.
• GAP இனை நடைமுறைப்படுத்தி முறையான பண்ணையொன்றை அமைப்பதன் மூலம் பண்ணையில் சுற்றுச்சூழல் மேம்படுத்தப்படும்.
• பண்ணைத்தொழிலாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

2. நுகர்வோருக்கு

• நஞ்சற்ற உணவுகள் கிடைக்கும்.
• உயர் தரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் உற்பத்தி செய்யப்பட்ட விவசாய உற்பத்திகளை நம்பிக்கையுடன் நுகர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
• சுற்றுச்சூழலுக்கு நேயமான உற்பத்திகள் கிடைக்கும்.

GAP சான்றிதழினை நடைமுறைப்படுத்த விவசாயிகள் பின்வரும் விடயங்களை நடைமுறைப்படுத்தல் வேண்டும்

1. செய்கை பண்ணும் நிலத்தின் வரலாறும் நிலமுகாமைத்துவமும் தொடர்பான அறிக்கையொன்றை பேணல்.
• பயிர்ச் செய்கைநடவடிக்கையானது இரசாயனரீதியாகஅல்லதுஉயிரியல் ரீதியாகபாதிப்படைவதனைதவிர்த்துக்கொள்ளல்.
• குறித்தபயிர்ச்செய்கைநிலமானதுகடந்தகாலத்தில் எவ்விதமானநடவடிக்கைகளுக்குபயன்படுத்தப்பட்டதுஎன்பதனை அறிந்து கொள்ளல்.
• பயிர் உற்பத்தியானதுபாதிப்படைவதற்கானஅபாயத்தினைதவிர்த்துக்கொள்ளல்.

2. பண்ணை கட்டமைப்புக்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம்
• பண்ணையைசுற்றிபாதுகாப்புவேலிஅமைத்தல்.
• உள்வருவதற்கும் வெளிச்செல்வதற்கும் வாயில்கள் பொருத்துதல்.
• காற்றுபலமாகவீசும் பிரதேசங்களில் காற்றுத் தடைகள் இடல்.
• பண்ணைஉபகரணங்கள் மற்றும் விவசாய இயந்திரங்களை வேறான இடம் ஒன்றில் வைத்திருத்தல்.

3. பயிர்களை ஸ்தாபித்தல் மற்றும் பயிர்ச்செய்கை பராமரிப்பு நடவடிக்கைகள்

• ஒவ்வொரு பயிரிற்கும் பொருத்தமான வர்க்கங்கள் தெரிவு செய்யப்படுவதுடன் தரமான விதைகள் பயன்படுத்துவதனை உறுதி செய்தல் வேண்டும்.
• நிலப்பண்படுத்தல், பயிர் நாட்டல், பயிற்றுவித்தல், களைக்கட்டுப்பாடு, பசளையிடல், நீர்ப்பாசனம், அறுவடை செய்தல் மற்றும் அறுவடைக்கு பின்னான கையாளுதல்
போன்ற பயிராக்கவியல் நடவடிக்கைகளினை சிபாரிசுக்கமைய மேற்கொள்ளல் வேண்டும்.

4. ஒருங்கிணைந்த நோய், பீடை முகாமைத்துவம்

• நோய் மற்றும் பீடைகளை அவதானமாக இனங்கண்டு கொள்ளல், உடனடியாக முகாமைத்துவ நடவடிக்கைகளை செயற்படுத்தல்.
• பீடைத்தாக்கத்தை தவிர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளான காய்களிற்கு உறையிடல், கவர்ச்சிப்பொறிகள் இடல், பூச்சி உட்புகா வலைகளை பயன்படுத்தல்
• அவசியமான சந்தர்ப்பங்களில் மட்டும் பொருத்தமான சிபாரிசு செய்யப்பட்ட பீடை நாசினிகளை உரிய அளவில் பயன்படுத்தல்
• பயன்படுத்திய பீடைநாசினிகள் தொடர்பான அறிக்கைகளை பேணல்.

5. ஒருங்கிணைந்த தாவரப்போசணை முகாமைத்துவம்

• மண் பரிசோதனை மேற்கொண்டு பயிரிற்கு தேவையான பசளையளவினை மாத்திரம் பயன்படுத்தல்
• தரமான பசளைகளை பயன்படுத்தல்
• சிபாரிசு செய்யப்பட்ட பசளைகளை உரிய முறையில் களஞ்சியப்படுத்தி பயன்படுத்தல்
• இயலுமானவரை பண்ணையில் தயாரிக்கப்பட்ட சேதனப்பசளையை பயன்படுத்தல், வெளியிடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சேதனப்பசளையை
பயன்படுத்துவதாயின் தேவையான பரிகரணங்களை மேற்கொண்ட பின்னரே பயன்படுத்தல்

6. பீடை நாசினி முகாமைத்துவம்

• பீடைநாசினிகளை பொறுப்புடனும் அவதானத்துடனும் பயன்படுத்தல்
• உரிய முறையில் பீடை நாசினிகளை களஞ்சியப்படுத்தல்
• பீடைநாசினிகொள்கலனிலுள்ளவிபரச்சுட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு செயற்படல்
• நச்சுத்தன்மை குறைந்த பீடை நாசினிகளை உரிய அளவில் மாத்திரம் பயன்படுத்தல்
• பயிற்றுவிக்கப்பட்ட தொழிலாளர்கள் மூலம் சகல பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பீடை நாசினிகளை பயன்படுத்தல்
• பீடை நாசினி கழிவு முகாமைத்துவத்தினை சரியான முறையில் கடைப்பிடித்தல்

7. அறுவடைக்கு பின்னான பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்ளல்

• உரியளவில் முதிர்ச்சியடைந்த பருவத்தில் பொருத்தமான நேரத்தில் அறுவடை செய்தல்
• பொருத்தமான அறுவடை செய்யும் முறைகள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தல்
• சுத்தமான பொருத்தமான கொள்கலன்களில் பொதி செய்தல்

8. பண்ணை முகாமைத்துவம்
• சிறந்த விவசாய நடைமுறைகளுடன் தொடர்பான பதிவேடுகளை பேணல் மற்றும் புதுப்பித்தல் (பல்லாண்டு பயிர்களுக்கு குறைந்தது 2 வருடங்களும் குறுகிய கால
பயிர்களிற்கு குறைந்தது 2 போகங்களிற்கும் அறிக்கைகள் பேணப்படல் வேண்டும்)
• ஆய்வுகூட பகுப்பாய்வு அறிக்கைகள் பேணப்படல் வேண்டும்
• பண்ணை தொழிலாளர்கள் பயிற்றுவிக்கப்படல்

9. தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் நலன்
• குடிநீர், மல சல கூட வசதி
• ஓய்வறை
• முதலுதவிப்பெட்டி
• வேலை செய்யக்கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுத்தல்
• வைத்தியப் பரிசோதனைகளிற்கு உட்படுத்தல்

சிறந்தவிவசாயநடைமுறைகள் செயற்றிட்டத்தின் படிமுறைகள்

1. உட்பிரவேச சான்றிதழினை பெறுதல்
2. B மட்டத்திலான GAP சான்றிதழினை பெறுதல்
3. A மட்டத்திலான GAP சான்றிதழினை பெறுதல்

1. உட்பிரவேச சான்றிதழினை பெறல்(Entry Certificate)

Tips on How to Win Money in an Online Casino

• சிறந்த விவசாய நடைமுறைகள் செயற்றிட்டத்தினை விவசாயிகளிடையே பிரபல்யபடுத்துவதற்காகவும் கூடுதலான எண்ணிக்கையான விவசாயிகளை இச்செயற்றிட்டத்துடன் தொடர்பு படுத்தும் நோக்குடன் சிறந்த விவசாய நடைமுறைகள் செயற்றிட்டம் தொடர்பாக ஆர்வமாகவுள்ள இதனை நடைமுறைப்படுத்தக்கூடிய சாத்தியப்பாடு நிலவும் பண்ணைகளுக்காக சிறந்த விவசாய நடைமுறைகள் செயற்றிட்டத்தின் முதலாவது படிமுறையாக உட்பிரவேச சான்றிதழானது பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளரினால் வழங்கப்படுகின்றது.
• சிறந்த விவசாய நடைமுறைகள் உட்பிரவேச சான்றிதழானது பண்ணைகளுக்கு ஆரம்ப சந்தர்ப்பங்களில் பெற்றுக் கொடுக்கப்படும் சான்றிதழாகையால் SL-GAP இலட்சினையை பயன்படுத்தி பண்ணை உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாது.

உட்பிரவேச சான்றிதழ்

நடைமுறைகள்

I.  சிறந்த விவசாய நடைமுறைகள் செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்த விருப்பம் தெரிவிக்கும் விவசாயிகளை இனங்காணல்
II.  குறித்த பண்ணையில் அடிப்படை பரீட்சிப்பினை மேற்கொண்டு (உள்ளக களஆய்வு பரீட்சிப்புப் பட்டியலிற்கு அமைவாக) நிவர்த்தி செய்யப்பட வேண்டிய குறைபாடுகளின் பட்டியலினையும் வழங்கல்
III.  இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்வதன் மூலம் SL-GAP சான்றிதழினைபெற்றுக்கொள்வதற்கு விவசாயி தகைமையுடையவராகின்றார்.

2. B மட்டத்திலான சான்றிதழினை பெறல்

I. உட்பிரவேச சான்றிதழினை பெற்றுக் கொண்ட பண்ணைகளில் மாகாண விவசாயத் திணைக்கள விவசாயப் போதனாசிரியரோ அல்லது தொழினுட்ப உதவியாளரோ உள்ளக களஆய்வினை மேற்கொண்டு GAP விண்ணப்படிவத்தினை மாவட்டத்திற்கு பொறுப்பான விவசாய வியாபார ஆலோசனை உத்தியோகத்தரிடம் (CAAB)கையளிப்பர்.
II. விவசாய வியாபார ஆலோசனை உத்தியோகத்தர் இறுதி கணக்காய்வினை மேற்கொண்டு அறிக்கையினை விதை அத்தாட்சிப்படுத்தல் சேவையின் பிரதான அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்.
III. பின்னர் GAPஅத்தாட்சிப்படுத்தல் பிரிவு மேலதிகபணிப்பாளர் (விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை) அவர்களினால் B மட்ட SL-GAP சான்றிதழ் வழங்கிவைக்கப்படும்.
IV. சான்றிதழினை பெற்றுக் கொண்ட பண்ணைகளின் பின்னூட்டல் நடவடிக்கைகள் மற்றும் விற்பனை ஒருங்கிணைப்பினை விவசாய வியாபார ஆலோசனை உத்தியோகத்தர் அல்லது மாகாண விவசாயத்திணைக்கள விவசாயப் போதனாசிரியர் அல்லது தொழினுட்ப உதவியாளர் மேற்கொள்வர்.

3.  A மட்டத்திலான சான்றிதழினை பெறல்

I. B மட்டத்திலான SL-GAP சான்றிதழினை பெற்றுக்கொண்ட பண்ணைகளில் விவசாய வியாபார ஆலோசனை உத்தியோகத்தர் உள்ளக கள ஆய்வினை மேற்கொண்டு GAP விண்ணப்படிவத்தினை பிராந்திய விதை அத்தாட்சிப்படுத்தல் சேவையின் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்.
II. பிராந்திய விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை அலுவலகத்தில் GAPகள ஆய்வு உத்தியோகத்தர்கள் கள ஆய்வினை மேற்கொண்டு அறிக்கையினை பிராந்திய விதை அத்தாட்சிப்படுத்தல் சேவையின் பிரதான அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்.

III. பின்னர் GAP அத்தாட்சிப்படுத்தல் பிரிவு மேலதிக பணிப்பாளர் (விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை) அவர்களினால் A மட்ட SL- GAP சான்றிதழ் வழங்கி வைக்கப்படும்.
IV. சான்றிதழினை பெற்றுக் கொண்ட பண்ணைகளின் பின்னூட்டல் நடவடிக்கைகள் மற்றும் விற்பனை ஒருங்கிணைப்பினை விவசாய வியாபார ஆலோசனை உத்தியோகத்தர் அல்லது மாகாண விவசாயத்திணைக்கள விவசாயப்போதனாசிரியர் அல்லது தொழினுட்ப உதவியாளர் மேற்கொள்வர்.

மாவட்டம் A  மட்டத்திலானசான்றிதழ் பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கை உட்பிரவேச சான்றிதழ் பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கை
யாழ்ப்பாணம்

38

15

கிளிநொச்சி

08

30

மன்னார்

15

100

முல்லைத்தீவு

14

64

வவுனியா

13

மொத்தம்

88

209

அட்டவணை 1: மாவட்ட ரீதியான GAP உற்பத்தியாளர்கள்

தற்போது இந்நடைமுறைகளை பின்பற்றி வடமாகாணத்தில் 88 விவசாயிகள் SL-GAP சான்றிதழ் பெற்று நன்மையடைந்துள்ளதுடன் 209 விவசாயிகள் நன்மையை பெறவுள்ளனர். எனவே இந்நடைமுறைகளை பின்பற்றி தங்கள் பகுதி விவசாயப் போதனாசிரியருடன் தொடர்பு கொண்டு தாங்களும் ஒரு சிறந்த விவசாய நடைமுறை உற்பத்தியாளராகி நன்மைகளை பெற்றிடுவீர்.

ஆக்கம்:
மு.விளம்பிதன்
விவசாயப்போதனாசிரியர்,
மாகாண விவசாயத்திணைக்களம் (வ.மா)